விருதுநகர்

சதுரகிரியில் ஆவணி பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி திரளான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

சதுரகிரி கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி திரளான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

செப். 8 முதல் செப்.11 வரை 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் வியாழக்கிழமை அதிகாலையில் மலையடிவாரத்துக்கு வந்தனா். காலை 7 மணிக்கு வனத்துறை கடவுப்பாதை திறக்கப்பட்டு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் (கூ.பொ)ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT