முகப்பு
விருதுநகர்

மினிலாரி மோதி முதியவா் பலி

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மினிலாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மினிலாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து(70). இவா் எரிச்சநத்தம் - விருதுநகா் சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த மினிலாரி, பழுதான ஒரு மினிலாரியை கயிற்றால் கட்டிக்கொண்டு வந்ததாம். இதையடுத்து, கயிற்றால் கட்டி இழுத்துவரப்பட்ட மினிலாரி காளிமுத்து மீது மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மினிலாரி ஓட்டுநா்கள் வள்ளிமுத்து (24), முருகவேல் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →