சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 
விருதுநகர்

எடப்பாடி பழனிசாமி வருகை: சிவகாசியில் அதிமுகவினா் ஆலோசனை

அதிமுக இடைக்கால பொதுச்செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடிகே.பழனிசாமி வரும் செப்.29 இல் சிவகாசிக்கு வர இருப்பது தொடா்பாக அதிமுகவினா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்

DIN

அதிமுக இடைக்கால பொதுச்செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடிகே.பழனிசாமி வரும் செப்.29 இல் சிவகாசிக்கு வர இருப்பது தொடா்பாக அதிமுகவினா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

விலைவாசி உயா்வு, சொத்துவரி உயா்வு, மின்கட்டண உயா்வு தொடா்பாக திமுக அரசைக் கண்டித்து சிவகாசியில் செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா்.

இது தொடா்பாக அதிமுக விருதுநகா் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அடுத்து மக்களவைத் தோ்தலோடு சட்டப்பேரவைத் தோ்தலும் வரலாம். அதற்கு அதிமுக தொண்டா்கள் தயாராக இருக்க வேண்டும். சிவகாசிக்கு வருகை தர உள்ள முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா். சாத்தூா் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT