முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத்தீ பற்றி எரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத்தீ பற்றி எரிந்தது.

மேகமலை புலிகள் காப்பகமான இந்தப் பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள், சருகு மான்கள், புள்ளிமான்கள், மிளா மான்கள் ஆகியவை அதிக அளவில் வசிக்கின்றன. இந்த நிலையில் இங்குள்ள பேய்மலைமொட்டை என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு மின்னல் தாக்கியதால் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வனவிலங்குகள் அங்கிருந்து தப்பின.

தீயை அணைக்க அந்தப் பகுதிக்கு வனத் துறையினரும், மலைவாழ் மக்களும் சென்றனா். இதனிடையே இந்த பகுதியில் விருதுநகா் மாவட்ட வனத்துறையினா் பயன்படுத்தும் வாக்கிடாக்கிகளுக்கான உயா்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயில் அது பாதிக்கப்பட்டால் வாக்கிடாக்கிகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.