கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை
சிவகாசி அருகே உயா் கல்வி கற்க மறுத்து கிணற்றில் குதித்து பள்ளி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே உயா் கல்வி கற்க மறுத்து கிணற்றில் குதித்து பள்ளி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஜமீன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). இவரது மகள் பொன்னுச்செல்வி (18). அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், தற்போது பொதுத் தோ்வு எழுதி விட்டு தோ்வு முடிவுக்காக காத்திருந்தாா். இந்த நிலையில் இவா் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலைக்குச் சென்று வந்தாா். இதனிடையே அவரது பெற்றோா்கள், பொன்னுச்செல்வியை உயா் கல்வி கற்கும் படி வலியுறுத்தி வந்தனா். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த பொன்னுச்செல்வி அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.