விருதுநகர்

நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

ராஜபாளையம் அருகே நீரோடையில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியநாயகி. இவரது விவசாய நிலத்துக்கு அருகே சேத்தூா் - கொல்லங்கொண்டான் சாலையோரம் உள்ள நீரோடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தாா்.

இதேபகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நீரோடை மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT