விருதுநகர்

கண்காணிப்புக் கேமராக்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில், தரகுமலை மாதா கோயில், மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

இதனால், இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கேமராக்கள் செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொருத்தவரை சுமாா் 90 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், கீழரத வீதி - தெற்கு ரத வீதி சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள சுழலும் கேமரா சுழலாமல் ஒரு பகுதியை மட்டும் கண்காணித்து வருகிறது.

இதேபோல, முக்கிய சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராங்களில் ஒரு சில கேமராக்கள் செயல்படாமல் உள்ளன.

மேலும், ஏற்கெனவே உள்ள கேமராக்களை மாற்றிவிட்டு துல்லியாக தெரியும் வகையிலான கேமராக்களை அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT