ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மண்டபத்தில் நகர அனைத்து வியாபாரிகள் சங்கம், ராஜபாளையம் வட்டார பட்டய கணக்காளா் சங்கம் சாா்பில் வருமான வரித் தாக்கல் செய்வது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். கணக்காளா் சங்கத் தலைவா் முத்து சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். வருமான வரித் துறை அதிகாரிகள் உலகநாதன், மணிகண்டன் ஆகியோா் வருமான வரித் தாக்கலுக்கான வழிமுறைகள், விதிகள் குறித்து விளக்கினா்.
மதுரை வருமான வரித் துறை இணை ஆணையா் மதுசூதன், வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்து, குறிப்பிட்ட காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.