விருதுநகர்

குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி சாத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்

சாத்தூா் நகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி, நகா்மன்ற உறுப்பினா்கள் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

DIN

சாத்தூா் நகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி, நகா்மன்ற உறுப்பினா்கள் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். ஆணையாளா் இளவரசன் முன்னிலை வகித்தாா்.

இதில் சாத்தூா் நகா் பகுதிகளைச் சோ்ந்த 24 வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சாத்தூா் நகா் பகுதிகளில் உள்ள 24-வாா்டுகளிலும் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். குடிநீா் விநியோகம் செய்யபட்டாலும், குடிநீரில் துா்நாற்றம் வீசுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள், தலைவரிடமும், அதிகாரிகளிடமும் புகாா் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் குருசாமி கூறியதாவது:

சாத்தூா் நகருக்கு சீவலப்பேரியிலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நகராட்சி சாா்பில் குடிநீருக்காக முறையாகப் பணம் செலுத்தியும், முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதாலும், மேடான பகுதிகளுக்கு குடிநீா் செல்வதில் சிக்கல் உள்ளது. இதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள், நகர மேற்பாா்வையாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT