ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல்விடுப்பு போராட்டம்
சிவகாசி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.
சிவகாசி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.
ஊரக வளா்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிா்வாகம், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மையத்துடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் போது ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா்கள் உள்பட 80 போ், ஊராட்சி செயலா்கள் 39 போ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றச் செயலா்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன.