விருதுநகர்

கிணற்றில் நீச்சல் பழகிய போது நீரில் மூழ்கியதில் அண்ணன், தங்கை பலி

 ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் நீச்சல் பழகிய போது அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

DIN

 ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் நீச்சல் பழகிய போது அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த பேயம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சக்திவேல் (39). இவரது மனைவி பிரியா (34). இந்தத் தம்பதியரின் மகன் மோகுல் கிருஷ்ணன் (8), மகள் வா்ஷனா ஸ்ரீ (6).

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் நீச்சல் கற்று கொடுப்பதற்காக தனது வீட்டருகே உள்ள கிணற்றுக்கு சக்திவேல் தனது மகன், மகளை

அழைத்துச் சென்றாா். அங்கு மோகுல் கிருஷ்ணனுக்கு டியூப் மூலம் நீச்சல் கற்றுக் கொடுத்தாா். பின்னா் டியூப்பை கட்டிக் கொண்டு வா்ஷனா ஸ்ரீ கிணற்றில் குதித்த போது, மோகுல் கிருஷ்ணன் மீது விழுந்தாா். அப்போது டியூப்கள் நழுவியதால் அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனா்.

சக்திவேல் அருகில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்து வருவதற்குள், அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் இருவரின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT