முகப்பு
விருதுநகர்

மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்துவதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்துவதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் பயன்படுத்துவதால் விவசாயிகள், நெசவாளா்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் ‘பீக் ஹவா்ஸ்’ முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மின்வாரியம் தனியாா் மயமாக்கப்படும். எனவே, ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

மாவட்ட செயற்குழு உறுப்பினா் தேவா, மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.