அதிமுக கிளைச் செயலா் கொலை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அதிமுக கிளைச் செயலா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அதிமுக கிளைச் செயலா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்ன குருசாமி (60). அதிமுக கிளைச் செயலரான இவருக்கும், இவரது உறவினரான மணிகண்டன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், அச்சம்தவிழ்த்தானில் நூலகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை சின்னகுருசாமி இறந்து கிடந்தாா். போலீஸாா் அவரது உடலை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் திங்கள்கிழமை இரவு சின்னகுருசாமிக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் சின்னகுருசாமி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.