வியாபாரி தற்கொலை
சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை பழைய காகித வியாபாரி தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் சதீஷ் (34). பழைய காகித வியாபாரி. இந்த நிலையில், தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.