முகப்பு
விருதுநகர்

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

விருதுநகரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:51 AM
பகிர்:

விருதுநகரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் முத்து தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி தையல்நாயகி (72). இவா் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்- அருப்புக்கோட்டை சாலையில் கூட்டுறவு மொத்த பண்டக சாலை அருகே சென்ற போது, தனியாா் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தையல் நாயகி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரபாகரன் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.