முகப்பு
விருதுநகர்

மின்னல் பாய்ந்ததில் பெண் பட்டாசு தொழிலாளி காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:24 PM
சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து சேதமடைந்த பட்டாசு ஆலையின் அறை.
பகிர்:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் கணேசன் என்வருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்கும் அறை, மருந்துக் கலவை அறை என மொத்தம் 100 அறைகள் உள்ளன.

இந்த ஆலைப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, ஒரு அறையில் மின்னல் பாய்ந்ததில் அங்கிருந்த வெடிப் பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன.

அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த ஆமத்தூா் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி காந்தி அம்மாள்(73) பலத்த காயமடைந்தாா். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.