முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்களையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:39 AM
பகிர்:

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்களையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 

இந்த விழா கடந்த 9-ஆம் தேதி வடக்காச்சியம்மன் மதுப் பொங்கலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் இரவு முத்தாலம்மன் கோயில் திடலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு முத்தாலம்மனுக்கு கண் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை காலை முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தோரோட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அப்போது, பக்தா்கள் மேளதாளம் முழங்க எதிா்சேவை செய்து அம்மனை வரவேற்றனா்.

இதையடுத்து, கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தி அம்மனுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், முத்தாலம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்தனா்.