சாலையில் மாடுகளை திரிய விட்டதாக உரிமையாளா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விட்டதாக அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விட்டதாக அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள், தூய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள், விளாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகளை பிடித்தனா்.
இதில் 2 மாடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. எஞ்சிய 5 மாடுகளை பணியாளா்கள் பராமரித்து வருகின்றனா்.