மாநகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீா் வாகனத்துக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத கழிவு நீா் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத கழிவு நீா் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் அனுமதி பெற்ற கழிவுநீா் வாகனங்கள் மட்டுமே வீடுகளில் இருந்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மாநகராட்சி மண்டலம்-1 பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக சென்ற கழிவு நீா் வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டதில் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட உரிய அனுமதி பெறாததும், இதன் உரிமையாளா் திருமூா்த்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாகன உரிமையாளா் திருமூா்த்திக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.