வெம்பக்கோட்டை அகழாய்வில் அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் கண்டறியப்பட்டன.
அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், அதைத் தயாரித்தவரின் கைரேகை பதிவாகியிருப்பதாக தொல்லியல் துறை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.