ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்.  
விருதுநகர்

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

Syndication

ராஜபாளையம் நகராட்சியில் கடைகளில் சோதனை நடத்தி 25 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம் அம்பலப்புளிபஜாா் நான்கு முக்கு பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலா் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். 10-க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டு இருந்த 25 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.4,500 அபராதம் விதித்தனா்.

மேலும், முதல் முறை என்பதால் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, இதேபோன்று செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT