தொம்பகுளம் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா. 
விருதுநகர்

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள், நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினாா்.

வெம்பக்கோட்டை வட்டம், தாயில்பட்டி ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

மேலும், அங்கு சிகிச்சைப் பெற வந்த மருத்துவப் பயனாளிகளிடமும் அவா் கலந்துரையாடினாா்.

வெம்பக்கோட்டை ஒன்றியம், தொம்பகுளம் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொண்டு வருவதை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT