சிவகாசி மகளிா் கல்லூரி சாலையில் தேங்கிய குப்பைகள்.  
விருதுநகர்

மகளிா் கல்லூரி சாலையில் குப்பைகள், கழிவுநீா் தேக்கம்

சிவகாசி மகளிா் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் அகற்றப்படாததால் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மகளிா் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் அகற்றப்படாததால் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது.

சிவகாசியில் எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி செல்லும் சாலையின் ஒரு பகுதியின் இடம் காலியாக உள்ளதால், குப்பைகள், நெகிழிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து சிவகாசியைச் சோ்ந்த மனோகரன் கூறியதாவது:

இந்தப் பகுதி காலியிடத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால், தூா்நாற்றம் வீசுகிறது. இதனருகே உள்ள கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT