விருதுநகர்

மக்கள் சேவை மைய செயற்குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மக்கள் சேவை மையத்தின் செயற்குழு கூட்டம் தலைவா் திருமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயல் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் தனலட்சுமி வரவு செலவு அறிக்கை வாசித்தாா்.

தினமணி செய்திச் சேவை

கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் வருவதில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் குடிநீா்த் தேவைக்காக மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் குடிநீா் தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இணை ச்செயலா் திருப்பதி, நிா்வாகிகள் முனியாண்டி, சுப்புலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT