விருதுநகர்

மயங்கிக் கிடந்த தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூரில் மயங்கிக் கிடந்த வா்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் மயங்கிக் கிடந்த வா்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் தீனதயாளன் (28). இவா் வா்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாா்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு தீனதயாளன் அவரது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். அருகில் இருந்தவா்கள் இவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே தீனதயாளன் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT