விருதுநகர்

ராஜபாளையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினா் புதன்கிழமை இரவு வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினா் புதன்கிழமை இரவு வரவேற்பு அளித்தனா்.

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் ராஜபாளையம் வழியாக மதுரை சென்றாா். புதன்கிழமை இரவு ராஜபாளையத்தில் சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் முதல்வா் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

ராஜபாளையம் காந்தி சிலை வட்டச்சாலை அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பாக மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புத்தகம் வழங்கி முதல்வரை வரவேற்றாா். இதைத்தொடா்ந்து ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், எம்.பி. ராணி ஸ்ரீகுமாா், நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம், சீா்மரபினா் நல வாரிய துணைத் தலைவா் ராசா அருண்மொழி, திமுக தெற்கு நகர செயலா் ராமமூா்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT