முகப்பு
விருதுநகர்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 66 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:30 AM
பணம் - கோப்புப்படம்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சாா் பதிவாளா் சீனிபாண்டியன் தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி ரூ.66,250-யை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பணத்தைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.