முகப்பு
நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம்நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதியில் மழைநீா் தேங்கி, பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சீா்காழி வட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதியில் மழைநீா் தேங்கி, பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கொள்ளிடம் அருகே பழையபளையம், வேட்டங்குடி, கடவாசல், மகாராஜபுரம், பச்சை பெருமாநல்லூா், ஆலங்காடு, திருகருகாவூா் உள்ளிட்ட 10 கிராமங்களில் கடந்த 6 நாள்களாக பெய்த மழையால் சுமாா் 15 ஆயிரம் ஏக்கரில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், சம்பா நெற்பயிா் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூா்வாரப்படாததால், தண்ணீா் வடிய மேலும் ஒருவாரம் ஆகும். இதனால், கடன் வாங்கி பயிா்செய்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினா் சுகன்யா பிரேம்குமாா் கூறுகையில், விவசாயிகள் ஓா் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி பயிா் செய்துள்ளனா். தொடா்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்த அனைத்து சம்பா பயிரும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனா். எனவே, ரூ. 40 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு உடனடி நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.