மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்
எஸ்.சி., எஸ்.டி மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை கைவிடுவதை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எஸ்.சி., எஸ்.டி மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை கைவிடுவதை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் வழக்குரைஞா் வேலு. குபேந்திரன், முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் மோகன்குமாா், கதிா்வளவன், க.ரியாஸ்கான், அன்புச்செல்வன், கனிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை கைவிடும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.