விவசாயிகளுக்கு ஆதரவாக கவனஈா்ப்பு போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் கவன ஈா்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் கவன ஈா்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நல்லத்துக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயி ராமு தலைமை வகித்தாா். விவசாயிகள் வினோத், தேவேந்திரன், செல்லமுத்து, அறிவழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டனா். முன்னதாக, தில்லி போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.