முகப்பு
நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஏா்கலப்பையுடன் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, சீா்காழியில் ஏா்கலப்பையுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 270 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, சீா்காழியில் ஏா்கலப்பையுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 270 போ் கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் சீா்காழி பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சீா்காழி நகா்மன்ற முன்னாள் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளருமான கேபிஎஸ்எம். கணிவண்ணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சிடி. லட்சுமணன், வட்டாரத் தலைவா்கள் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். ராஜகுமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஏா்கலப்பையுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, பேரணியாக செல்ல முயன்ற மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சரத்சந்திரன், ஏபிஎஸ். குமாா், எஸ். பட்டேல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் பி.எஸ். ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பானு சேகா் உள்பட 270 பேரை போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பிறகு, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →