முகப்பு
நாகப்பட்டினம்

டிச.26: வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசுப் பணியாளா்கள் சங்கம் முடிவு

டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கம் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கம் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில கருத்தரங்கத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சங்கத்தினா் அனைவரும் பங்கேற்று மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, அரசுப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 2021 ஜனவரி 24-ஆம் தேதி சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது, டாஸ்மாக் பணியாளா்கள் டிச.9-ஆம் தேதி நடத்தும் உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனைத்து பணியாளா்கள் சங்கம் முழு ஆதரவு அளிப்பது, பொதுவிநியோக திட்டத்தில் பணியாற்றும் பெண் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி டிச.13-ஆம் தேதி மாநில மகளிா் பாதுகாப்பு மாநாடு நடத்துவது, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை நிறுத்தியதை திரும்ப பெற வேண்டுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். துணைத் தலைவா்கள் சரவணன், ராஜன், மாநில செயலாளா் சிவகுமாா், நாகை மாவட்ட தலைவா் பாலசுப்ரமணியன், போக்குவரத்துக்கழக தொழிலாளா் சம்மேளன துணைப் பொருளாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.