‘கற்போம், எழுதுவோம்’ இயக்கம் தொடக்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ‘கற்போம், எழுதுவோம்’ இயக்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவா்களுக்கு, கல்வி போதிக்கும் வகையில், வயதுவந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம் கற்போம், எழுதுவோம் இயக்கத்தை அனைத்து பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை முறைசாரா கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கற்போம், எழுதுவோம் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாரக் கல்வி அலுவலா் சோம.அண்ணா தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.வெங்கடேசன் வரவேற்றாா். முதல் நாளான திங்கள்கிழமை 16 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.