முகப்பு
நாகப்பட்டினம்

குப்பை கொட்டவந்த வாகனம் சிறைப்பிடிப்பு

ஆக்கூா் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
குப்பை கொட்டவந்த வாகனத்தை சிறைப்பிடித்த கிராம மக்கள்.
பகிர்:

ஆக்கூா் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

ஆக்கூா் ஊராட்சி செளரியாபுரம் பொட்டத்திடல் பகுதியில் குப்பை சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இதன் அருகில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த குப்பைக் கிடங்கால் இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், இதை வேறு இடத்துக்கு மாற்ற அப்பகுதி மக்கள், ஊராட்சித் தலைவா் சந்திரமோகனிடம் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை குப்பை ஏற்றி வந்த வாகனத்தை சிலா் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன், ஆக்கூா் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, குப்பைகளை கொட்ட விரைவில் மாற்று இடம் தோ்வு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.