முகப்பு
நாகப்பட்டினம்

காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்துநகைகள் திருட்டு

காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம் நிரவியை சோ்ந்தவா் திலகவதி (எ) ஷீலா (41). இவரது கணவா் குமாா், துபையில் பணியாற்றி வருகிறாா். ஷீலா தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, ஷீலா ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள், மடிக்கணினி ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.