நாகப்பட்டினம்

ஆக்கிரமிப்பு குளத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

மயிலாடுதுறை அருகே பொன்வாசநல்லூா் கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொன்வாசநல்லூா் கிராமத்தில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள சின்னகுளத்துக்குச் செல்லும் பாதை மற்றும் குளக்கரையை தனியாா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் இல்லையென கூறப்படுகிறது. இதை கண்டித்து கிராமமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆக்ரமிப்பை மீட்டுத் தர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த மறியலால் ஆனந்ததாண்டவபுரம் - சேத்தூா் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT