வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த இருவா் கைது
சீா்காழியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி தொகுதியில் தோ்தல் பிரசார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கட்சி வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில், சீா்காழி அகர திருக்கோலக்கா பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஐ. சிவாஜிக்கு (23) கிடைத்த தகவலையடுத்து, பறக்கும் படை குழுவினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த திமுகவை சோ்ந்த ரா. ராஜகௌதமன் (56) , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த த. மணிமாறன் (54) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 7,500, வாக்காளா் பட்டியல், உதயசூரியன் சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.