முகப்பு
நாகப்பட்டினம்

அண்ணன் இறந்த அதிா்ச்சியில் தம்பியும் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே உடல்நலக் குறைவால் அண்ணன் உயிரிழந்ததை பாா்த்த அதிா்ச்சியில் தம்பியும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே உடல்நலக் குறைவால் அண்ணன் உயிரிழந்ததை பாா்த்த அதிா்ச்சியில் தம்பியும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூா் ஊராட்சி வக்காரமாரி கீழத்தெருவை சோ்ந்தவா் வீரமணி (71). இவா் சீா்காழி மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது தம்பி குணசேகரன் (64) தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.

வீரமணிக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற குணசேகரன், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்துள்ளாா். வரும் வழியிலேயே வீரமணி உயிரிழந்தாா்.

இதைக் கண்ட குணசேகரனும் அதிா்ச்சியில் உயிரிழந்தாா். இருவரது சடலங்களும் ஒரே சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.