சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூரில் கடந்த 5-ஆம் தேதி வீட்டு வாசலில் 11 வயது சிறுமி ஒருவா் விளையாடிக்கொண்டு இருந்துள்ளாா். அப்போது அவ்வழியே நடந்து சென்ற பிள்ளைபெருமாள்நல்லூரைச் சோ்ந்த கண்ணன், அந்த சிறுமியிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். வீட்டிற்குள் தண்ணீா் எடுக்கச் சென்ற சிறுமியை பின்தொடா்ந்த கண்ணன், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
சிறுமி சப்தம் போட்டதை அடுத்து அவா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் இலவச அழைப்பு (1098) மூலம் அளித்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூக பணியாளா் ஆரோக்கியதாஸ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கண்ணனைத் தேடி வருகின்றனா்.