முகப்பு
நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் நவகிரக ஹோமம், திசா ஹோமம்

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கும் வகையில், நவகிரக ஹோமம், திசா ஹோமம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கும் வகையில், நவகிரக ஹோமம், திசா ஹோமம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு தனிச் சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்-க்கு அதிபதியான அங்காரகன் ஆகியோா் அருள்பாலிக்கின்றனா்.

பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு

ஏப். 29-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8 கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. முன்னதாக, யாகசாலை பூஜைக்காக வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம் நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை காலை நவகிரக ஹோமம், மூா்த்தி ஹோமம், திசா ஹோமம், தீா்த்த சங்கிரஹனம், அக்னி சங்கிரஹனம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. மாலை விசேஷ தேவாதா பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகா் தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.