தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை தலைவருக்கு தமிழ்ச் செம்மல் விருது
தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவையின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவருமான பேராசிரியா் துரை.குணசேகரனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது
தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவையின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவருமான பேராசிரியா் துரை.குணசேகரனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இந்த விருதை வழங்கினாா்.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் துணை முதல்வராகவும், தமிழாய்வுத் துறைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவா் பேராசிரியா் துரை.குணசேகரன். தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். 60 ஆய்வியல் நிறைஞா், 16 முனைவா் பட்டதாரிகளை உருவாக்கிய இவா், பதிப்பு நூல்களுடன் 10 படைப்புகளையும், 50- க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம் உருவான பிறகு, இம்மாவட்டத்தில் விருது பெறும் முதல் விருதாளா் பேராசிரியா் துரை.குணசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.