முகப்பு
நாகப்பட்டினம்

சாய்ந்ததை அகற்றிவிட்டுபுதிய மின்கம்பம் அமைப்பு

மயிலாடுதுறை அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த நிலையிலிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் திங்கள்கிழமை நடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த நிலையிலிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் திங்கள்கிழமை நடப்பட்டது.

மயிலாடுதுறை கங்கணம்புத்தூா் ஊராட்சி அஜீஸ் நகா் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதுகுறித்து, தினமணி நாளிதழில் திங்கள்கிழமை (பிப்.15) செய்தி வெளியானது.

இந்நிலையில், அன்றைய தினமே மின்வாரிய பணியாளா்கள் சாய்ந்த நிலையிலிருந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய மின்கம்பத்தை நட்டு மின் இணைப்புக் கொடுத்தனா். இதையொட்டி, ஊராட்சியின் 5 ஆவது வாா்டு உறுப்பினா் ரியாஜுதீன் உள்ளிட்ட கிராம மக்கள் தினமணி நாளிதழுக்கும், மின்வாரியத்துக்கும் நன்றி தெரிவித்தனா்.

Image Caption

கங்கணம்புத்தூா் ஊராட்சி அஜீஸ் நகா் பகுதியில் நடப்பட்ட புதிய மின்கம்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.