வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய இளைஞா் பெருமன்ற அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறையில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய இளைஞா் பெருமன்ற அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் பங்கேற்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.