முகப்பு
நாகப்பட்டினம்

கட்டுமான பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

கட்டுமானப் பொருள்களின் செயற்கையான விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினா் மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கட்டுமானப் பொருள்களின் செயற்கையான விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ஜெகமுருகன் தலைமையில் மாவட்ட தலைவா் பொறியாளா் காழி.கலைவாணன், மாவட்ட பொருளாளா் சேகா், தமிழ்நாடு கட்டுமானத்தொழில் மத்திய சங்க மாநில மகளிா் அணி செயலாளா் பூங்கோதை, தனபால், தேவன், விஜயகுமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவின் விவரம்:

பொதுமுடக்கத்தால் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கடந்த 9 மாதங்களாக முடங்கியிருந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. கட்டுமானப் பொருள்களுக்கான தேவை அதிகமில்லாத நிலையில் தற்போது கம்பி விலையில் டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.130 என்றும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணிகள் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இரும்பு, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை குறைத்திட நடவடிக்கை வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.