முகப்பு
நாகப்பட்டினம்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி 826 பேருக்கு கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 1, திருநள்ளாறு 1 என 2 பேருக்கு கரோனா உறுதியானது.

இதுவரை 71,965 பரிசோதனை செய்யப்பட்டதில், 3,874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 3,778 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 2 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →