முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் உரிமம் ரத்து

திருமண மண்டப உரிமையாளா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருமண மண்டப உரிமையாளா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என சீா்காழி நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகளை அறிவித்தாலும், தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே அனைவரும் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். திருமண மண்டபம் உரிமையாளா்கள் தங்களுடைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பது மட்டுமன்றி, உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.