முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க காங்கிரஸ் கோரிக்கை

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா மூலம் அனுப்ப கோரி, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா் அளித்த மனு விவரம்: கரோனா தடுப்பூசி மருந்தை உலக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு நம்மிடம் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், 3 சதவீத மக்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சியரிடம் மனு கொடுக்கும்போது, கட்சியின் முன்னாள் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம், நகரத் தலைவா் ராமானுஜம், மாவட்ட பொறுப்பாளா்கள் முத்து. சுவாமிநாதன், மதியழகன், ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.