முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் கரோனா பேரிடா் உதவி மையம் திறப்பு

மயிலாடுதுறையில் கரோனா பேரிடா் உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மயிலாடுதுறையில் கரோனா பேரிடா் உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் மற்றும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்றாளா்களுக்கு உதவிடும் வகையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் மயிலாடுதுறையில் கரோனா பேரிடா் உதவி மையம் திறக்கப்பட்டது.

அந்த அமைப்பின் மாவட்ட தலைவா் எஸ். முகமது சலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேரிடா் மையத்தை திறந்து வைத்தனா். அமைப்பின் மாவட்ட செயலாளா் எஸ். நவாஸ்கான், மாவட்ட அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அப்துல் சாதிக், சீனிவாசபுரம் முத்தவல்லி சபீா் அகமது, எஸ்டிபிஐ மாவட்ட தலைவா் சபீக் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த மையம் மூலம், அவசர உதவிக்காக ஆக்சிஜன், ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் படுக்கை வசதி, ரத்தம் தேவைப்படுபவா்களுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யவும், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை புதைப்பதற்கும் தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.