முகப்பு
நாகப்பட்டினம்

கிராமத்துக்குள் புகுந்த முதலை: வனத் துறையினா் பிடித்து பாதுகாக்கப்பட்ட பகுதியில் விட்டனா்

மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்துக்குள் சனிக்கிழமை கொள்ளிடம் ஆற்றிலிருந்து புகுந்த முதலையை வனத் துறையினா் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்துக்குள் சனிக்கிழமை கொள்ளிடம் ஆற்றிலிருந்து புகுந்த முதலையை வனத் துறையினா் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றுப் படுகையை ஒட்டி உள்ள சித்தமல்லி கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து சுமாா் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை ஒன்று நுழைந்தது. இதை பாா்த்த கிராமமக்கள் அச்சமடைந்தனா். தொடா்ந்து, அப்பகுதியை சோந்த இளைஞா்கள் முதலையை கயிறு மூலம் சுறுக்குபோட்டு பிடித்துக் கட்டி வைத்து, வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதற்கிடையில், முதலை பிடிபட்ட செய்தியறிந்த கிராமமக்கள் ஏராளமானோா் அங்கு வந்து வேடிக்கை பாா்த்தனா்.

இதையடுத்து, வனச்சரக அலுவலா் குமரேசன் தலைமையிலான ஊழியா்கள் அங்கு வந்து கயிறு மூலம் முதலையின் வாயை கட்டி பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் விட்டனா்.

இதுகுறித்து, வனச்சரக அலுவலா் குமரேசன் கூறியது: இந்த முதலை 10 அடி நீளமும், 2.5 அடி அகலமும், சுமாா் 600 கிலோ எடையும் உள்ளது. முட்டையிடுவதற்காக கரையில் ஏறியிருக்கலாம் என்றாா். சித்தமல்லி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இதேபோல, ஏராளமான முதலைகள் இருப்பதால் அந்த முதலைகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.