முகப்பு
நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியா் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

மயிலாடுதுறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறையில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவருபவா் அண்ணாதுரை (50). இவா் கடந்த 2010 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தன்னிடம் உடற்கல்வி பயின்று, தற்போது கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம் இரட்டை அா்த்தத்தில் பேசியும், பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளாராம்.

இதுகுறித்து, ஆன்லைன் மூலம் அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஆசிரியா் அண்ணாதுரையை கைது செய்தனா்.

இதையறிந்த, அந்த ஆசிரியரின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆசிரியருக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் திரண்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.